திருவள்ளூர் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி தனியார் பள்ளி சார்பில் இன்று நடைபெற்றது.
பேண்டு வாத்தியத்தோடு மாணவர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணி - undefined
திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
![பேண்டு வாத்தியத்தோடு மாணவர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2985908-thumbnail-3x2-band.jpg)
பள்ளி மாணவர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணி
இந்த பேரணியை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிசெல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பதாகைகள் மற்றும் துண்டு அறிக்கைகளை மக்களுக்கு வழங்கினார்கள்.
பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலம் பேசினர். இதில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இடங்களில் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணி