திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர், அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த லோகேஷ், தனக்கு தினம்தோறும் கிடைக்கும் பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேமித்து வைத்துவந்தார்.
ஆட்சியரிடம் கரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவன்!
திருவள்ளூர்: 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை, கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
ஆட்சியரிடம் கரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவன்!
அவ்வாறு சேமித்து வைத்த ஆயிரத்து 145 ரூபாயை கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கினார். சேமிப்பு பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அந்த மாணவனை பாராட்டினார். இதுபோன்ற கொடுக்கும் உள்ளங்கள் சிறு வயதில் மாணவர்கள் மத்தியில் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மீது எஃப்.ஐ.ஆர்