திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகில் அமைந்துள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகிறார் அதிகை முத்தரசி(6). இவர், பள்ளியை பழுதுபார்த்து தரக் கோரியும், பள்ளி வளாகம், பள்ளியை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் நோயாளிகள் தங்குமிடமாகவும், மது அருந்துபவர்களின் கூடமாகவும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் குப்பை கொட்டும் இடமாகவும், தீய எண்ணம் கொண்டவர்களின் குற்றச் செயலுக்கு பயன்படுத்தும் விதமாகவும் உள்ளது. இது தொடர்பாக அரசு அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குறிப்பிடுகிறார் அதிகை முத்தரசி.
ஒன்றாம் வகுப்பு பள்ளி மாணவியின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்!
திருவள்ளூர்: பள்ளியை மேம்படுத்தக் கோரி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி அளித்த மனுவை சென்னை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கல்வியை முன்னேற்ற அனைத்து ஏற்பாடும் செய்வதாக அரசும், அரசு அலுவலர்களும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாண்புமிகு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 16ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் குழந்தை கொடுத்த புகார் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், அது சம்பந்தம்பட்ட கல்வித்துறை அலுவலர்கள் நேரில் ஆஜராக கோரியும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.