திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் ராமன்(37). இவர் அதே பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது - Thiruvallur Latest crime news
திருவள்ளூர்: பொன்னேரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
பள்ளி பேருந்து ஓட்டுநர்
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியவர் போக்சோ சட்டத்தில் கைது