திருவள்ளூர் : சித்திரை ஏகாதசியையொட்டி திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவ சுவாமி கோயிலில் வீரராகவ பெருமானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, நான்கு மாட வீதிகளில் வீரராகவப்பெருமாள் வலம் வந்தார்.
அப்போது, வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு அகோபில மடம் வீரராகவ சுவாமி கோயில் சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது.