தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல் - 3 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம்! - news in tamil

Tamilnadu Satthunavu Anganwadi Sangam: மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்
சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 10:35 AM IST

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பியும் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டமானது, மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் சிவா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் கால வாக்குறுதியான வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 6,750 அகவிலைப்படி உடன் வழங்க வேண்டும். 10 வருட பணி முடித்த சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை கல்வி காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து, பணியில் ஈடுபடுத்தி விட வேண்டும்.

இதையும் படிங்க:“சிறையில் உள்ள 36 இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு, சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், அங்கன்வாடி சங்கத்தினர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட திருவள்ளூர் நகர காவல் துறையினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி சங்கத்தினரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:"அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர்" - ஆளுநரை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு

ABOUT THE AUTHOR

...view details