தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் - சசிகலா - அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும்

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய தலைமையாக இருக்க வேண்டும் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும்
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும்

By

Published : Jul 4, 2022, 3:49 PM IST

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வி.கே. சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 03) குமணன்சாவடிடக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களும், பெண்களும் ரோஜா மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வேனில் தொண்டர்களிடம் பேசியதாவது, “இது போன்ற செயல்வீரர்கள் இருப்பதால்தான் நமது இயக்கம் எத்தனை சோதனை வந்தாலும் தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. இனி வரும் காலம் பொற்காலமாக அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக கழகம் தொடங்கி 50 ஆண்டுகளில் ஏழு முறை ஆட்சி அமைத்துள்ளோம். இன்றைய ஆட்சியாளர்கள் செய்தது என்ன உலகத்திலேயே தாங்கள் மட்டும் தான் திராவிடர்கள் என்று மார்தட்டிக்கொண்டு செயல்படுத்திய திட்டங்கள் பற்றி எடுத்து சொன்னாலே போதும். இவர்களின் திராவிட சிந்தனை எப்படிப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும்

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்துவிட்டு பெண்களின் கண்களில் அந்த பஸ் படாமலேயே செலுத்துவது, ஆற்று படுகைகளில் பராமரிப்பு பணிகளை தொடங்காமலேயே மேட்டூர் அணையில் நீர் திறந்து விடுவது. சதுரங்க வேட்டை படம் போல் குடும்ப தலைவிகளை ஏமாற்றி ஆட்சியை பிடித்து பதவியில் அமர்ந்து கொண்டது.

திமுகவின் திராவிட செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். நாம் நடத்தியது திராவிட ஆட்சியா? அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் விளம்பர ஆட்சி திராவிட ஆட்சியா?. 50 ஆண்டுக்கால வரலாற்றில் தொடர் தோல்வி இதுவரை கண்டதில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 34 பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில் தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால் நமது வெற்றி சின்னம் இரட்டை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சி செய்து தாங்கள் உயர்ந்த பதவியில் நீடிக்க வேண்டும் என முட்டுக்கடை போடுவது எந்த விதத்தில் நியாயம்.

ஒரு சிலரின் மேம்பட்ட அரசியலுக்கு அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது கட்சியா, ஆட்சியா இதில் எதனை காப்பாற்றுவது என்று இருந்தபோது கட்சியை காப்பாற்றினார்கள். இயக்கத்தின் நன்மை கருத்தில் கொண்டு ஒற்றுமையோடு செயல்பட்டால் கழகம் வலிமை பெறும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் யாராலும் மாற்றி அமைக்க முடியாத வகையில் சட்ட திட்டங்களை கட்டமைத்து பாதுகாப்பை வழங்கியுள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடிக்க கூடியவர்கள் தான் உண்மையான தலைவராக இருக்க முடியும். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும் அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக அனைத்து கொடி பிடிக்கும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது. அனைவரையும் அரவணைத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்மால் தான் இந்த இயக்கத்தை மீண்டும் அதே பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது.

ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெறும் என்பதை இந்த நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவினர் நமது கட்சியை அழித்து விடலாம் என்று கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நடப்பதை பார்க்கும்போது திமுகவின் ஆசை, திட்டங்கள் நிறைவேறுவதாகத் தான் எனக்கு தோன்றுகிறது அதற்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் பொறுமையாக இருக்கிறேன்.

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும் என்ற அண்ணாவின் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும். யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் காலம் கனியும். அடுத்து அமையப் போவது அதே பொற்கால ஆட்சி தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அதுவே மக்களுக்கான ஆட்சியாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை, அரசு கலை கல்லூரி, அரசு மருத்துவமனை தர உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக தலைமையிலான அரசு நிறைவேற்றி தர வேண்டும். அவர்கள் செய்து தரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இன்னும் கொஞ்ச காலம் பொறுத்து இருங்கள். விரைவில் நமது ஆட்சி அமைய உள்ளது. அதில் இந்த பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக தொண்டர்களை சந்தித்த ஓபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details