திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பெத்திகுப்பம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டபோது அந்த காரில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
கடத்தல் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - மூன்று பேர் கைது! - திருவள்ளூரில் மூன்று பேர் கைது
திருவள்ளூர்: சொகுசு காரில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
red sanders smuggling
இதனையடுத்து, கார் ஓட்டுநர் கிருபாகரன், சுதாகர் உள்ளிட்ட மூவரை கைது செய்த காவல்துறையினர், கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கும்மிடிப்பூண்டி பகுதியில் பதுக்கி வைத்து சென்னைக்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது.