திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனை ஆட்சியர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
திருத்தணி தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.