திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் சாமியார் கோவிந்தராஜ். இவர் சித்த வைத்தியமும்,ஜோதிடமும் தெரிந்தவர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண் சிஷ்யை, கோவிந்தராஜ் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் மாலை கோவிந்தராஜ் பூஜை செய்து கொண்டிருந்த போது திடீரென வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அப்போது பக்கத்து அறையில் இருந்த லாவண்யா ஓடி வந்து பார்த்த போது, பலத்த தீக்காயங்களுடன் கோவிந்தராஜ் வீட்டிற்கு வெளியே ஓடி சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்றவர்கள் தீக்காயங்களோடு போராடிக் கொண்டிருந்தது குறித்து மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடலில் தீ்பிடித்து துடித்துக் கொண்டிருந்த கோவிந்தராஜை காரில் ஏற்ற முயன்ற போது மயங்கி விழுந்து இறந்துள்ளார்.