திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. லாரியின் இன்ஜினில் பிடித்த தீ மளமளவென பரவி வண்டிக்குள் இருந்த உதிரி பாகங்கள் திடீரென வெடிக்க ஆரம்பித்தன.
மணல் ஏற்றி செல்லும் லாரியில் தீ விபத்து! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர்: கவரப்பேட்டையில் மணல் ஏற்றி செல்லும் லாரி தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
![மணல் ஏற்றி செல்லும் லாரியில் தீ விபத்து! Fire](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-tn-trl-02a-lorry-fire-vis-10007-03062020134235-0306f-1591171955-1088.jpg)
Fire
இதைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்து லாரி முற்றிலும் சேதம் அடைவதை தவிர்த்தனர்.
இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.