தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் பறிமுதல்! - Private financial institution

பொன்னேரி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 5 லட்சம் பறிமுதல்!
உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 5 லட்சம் பறிமுதல்!

By

Published : Mar 13, 2021, 11:03 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர் திவீர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமையில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, தச்சூர் கூட்டுரோடு சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து அவர்கள் சோதனையிட்டனர். இச்சோதனையில், தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து லட்சம்ரூபாய் இருப்பது தெரியவந்தது. மேலும் இந்தப் பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தினை பறிமுதல் செய்து, பொன்னேரி கோட்டாட்சியர் செல்வத்திடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் உள்ளனவா என சரிபார்த்த பின் பொன்னேரி கருவூலத்திற்கு அப்பணத்தை எடுத்துச் சென்று ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:போலி தங்க நகைகளை காட்டி நாடகம் - பறக்கும் படையினர் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details