தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2022, 7:14 AM IST

ETV Bharat / state

கன்டெய்னர் லாரியில் தீ - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவள்ளூர் அருகே ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவன கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.

தீக்கிரையாகின
தீக்கிரையாகின

திருவள்ளூர் அருகே போளிவாக்கத்தில் டெலிவரி என்னும் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்காக சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு சாலை மார்க்கமாக இன்று (மே 26) டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், வெங்கத்தூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று லாரியில் இருந்து புகை வருவதை கண்டு ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின், கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது லாரியில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.

கொளுந்து விட்டெறிந்த தீயினால், ரூ.1 கோடி வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையானது

சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர், செல்போன், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், புடவை உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பல பொருட்கள் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியின் செயினை பறித்து வாயில் பதுக்கிய பெண்.. சமத்தாக பிடித்துக் கொடுத்த சிறுமி..

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details