திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபாக்கத்தைச் சேர்ந்தவர், மாதவன். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சில நாள்களுக்கு முன்னதாக பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் தலை மட்டும் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் கும்மிடிப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில், புது கும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தோட்டத்தில், உடல் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அதையடுத்து கொலை செய்யப்பட்டது பிரபல ரவுடி மாதவன் எனத் தெரியவந்தது. தொடர்ந்து மாதவனின் சடலம் உடனடியாக உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.