அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனி திறமை என்பது எப்போதும் அளாதியது. வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் மாணவர்களின் ஆட்டம், பாட்டம் என்பது மாணவர்களுக்கே உண்டான சந்தோஷத்தின் உச்சகட்டம். அந்த சமயத்தில் மாணவர்கள் மேஜையில் போடும் தாளம், பல குட்டி ட்ரம்ஸ் மணிகளை கண்முன் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மேஜையில் ட்ரம்ஸ் வாசித்த அரசுப் பள்ளி ராக்ஸ்டார்ஸ்! - Students performance on table
திருவாரூர் : திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மேஜையில் ட்ரம்ஸ் வாசித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
![மேஜையில் ட்ரம்ஸ் வாசித்த அரசுப் பள்ளி ராக்ஸ்டார்ஸ்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4167824-thumbnail-3x2-student-performance-22222.jpg)
குட்டி டிரம்ஸ் சிவமணிகள்
குட்டி டிரம்ஸ் சிவமணிகள்
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்வியோடு சேர்த்து மாணவர்களின் தனித்துவத்தையும் வெளிக்கொண்டு வரும் வகையில், வாரம்தோறும் தமிழ் மன்றம், கணிதவியல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதேபோல், இசைமன்றம் என்ற தலைப்பில் ஒரு கச்சேரியை மாணவர்கள் நிகழ்த்தி உள்ளனர். எந்தவித இசை கருவிகளும் இல்லாமல் மேஜையில் மாணவர்கள் போட்ட துள்ளல், பார்ப்பவரை வியப்படையச் செய்துள்ளது.
Last Updated : Aug 18, 2019, 5:30 PM IST