திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பரணம்பேடு, பண்பாக்கம் ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீடுகளிலிருந்த பீரோவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணம் ஆகியவற்றை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
திருடு போன வீடுகளின் உரிமையாளர்கள் அனைவரும் குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து பார்த்தால் கொள்ளையர்கள் நன்றாக நோட்டமிட்டு பூட்டிய வீடுகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.