திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் செப்டம்பர் 15ஆம் தேதி ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின் வாகன சத்தம் கேட்டு காரில் தப்ப முயன்றனர். காவல் துறையினர் சுற்றிவளைத்துப் பிடிக்க முயற்சித்தபோது காரை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
ஆந்திர மாநிலப் பதிவு எண் கொண்ட காரைப் பறிமுதல்செய்த ஆரம்பாக்கம் காவல் துறையினர், காரில் இருந்த கையுறை, ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சரியான நேரத்திற்கு அங்கு சென்றதால் ஏடிஎம்மில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
இதையும் படிங்க: வழக்கறிஞரிடமிருந்து ரூ.1 லட்சம் பறித்துச் சென்ற குரங்கு