தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! கோஷம் எழுப்பிய மக்கள் - தண்ணீர்

திருவள்ளூர்: முறையாகக் குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

By

Published : Oct 12, 2019, 9:50 AM IST

திருவள்ளூர் மாவட்டம் சூளைமேனி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கயடை கிராமத்தில் கடந்த ஆறு மாத காலமாக முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அறிவுச்செல்வன் தலைமையில் அரசுப் பேருந்தை வழிமறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் குடிநீர் வேண்டி சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினரும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அலுவலர்கள் மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய பின்பே சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்திய போலீஸ்... பொதுமக்கள் குற்றச்சாட்டு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details