திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிபாலாஜி நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்ட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் மழைநீரும் கழிவுநீரும் தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும் நோய்கள் பரவுவதற்கான அபாயமும் நிலவி வருகிறது.
சாக்கடையாய் மாறிய சாலை! செவி சாய்க்காத அரசுக்கு மக்கள் கோரிக்கை! - திருவள்ளூர்
திருவள்ளூர்: பாதாள சாக்கடை அமைக்கும் பணி பாதியிலியே நிறுத்தப்பட்டதால் மழைநீர் தேங்கி சாக்கடையாய் மாறியுள்ள சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.

சாக்கடையாய் மாறிய சாலை!
செவி சாய்க்காத அரசுக்கு மக்கள் கோரிக்கை!
மேலும், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதால் அப்பகுதியில் போக்குவரத்திற்கும் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் மீண்டும் பாதாளச் சாக்காடை அமைக்கும் பணியை தொடங்கவும் சாலைகளை சீரமைக்கக் கோரியும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.