தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிறப்பு மையங்களில் கோட்டாட்சியர் ஆய்வு! - கரோனா எண்ணிக்கை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவரும் 15 சிறப்பு கரோனா மையங்களில் கோட்டாட்சியர் வித்யா ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா சிறப்பு மையங்களில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு!
Thiruvallur district corona cases

By

Published : Sep 13, 2020, 11:30 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாகவுள்ள பகுதிகளாக மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த கரோனா சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் லதா நியமிக்கப்பட்டார்.

அவரின் அறிவுறுத்தலின்படி கும்மிடிப்பூண்டியில் நாள்தோறும் மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், சுண்ணாம்புகுளம், பூவளம்பெடு போன்ற 15 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதனடிப்படையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள 15 சிறப்பு முகாம்களிலும் பரிசோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதையும், வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படும் சுவாப் எனப்படும் கிராமப்புற பரிசோதனை முறைகளையும் பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கும்மிடிப்பூண்டியில் ஆயிரத்து 620 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 20 பேர் இறந்த நிலையில் மீதமுள்ள 69 பேர் சிகிச்சைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details