தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறைப்பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்க ஆட்கொணர்வு மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர்: செங்கற்சூளையில் கொத்தடிமைகளாக சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள 300 பேரை மீட்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Jun 1, 2020, 11:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம், புதுப்பாக்கத்தில் முனுசாமி என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள துமா பார்தியா, சாட்டி பாரியா, கோபால் சாஹு, ஒஷா பந்து சாஹு உள்பட 300 பேரை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியப்பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளவர்கள் தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, அடியாட்களை ஏவி விட்டு அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை எனவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு வருகிற ஜூன் மூன்றாம் தேதிக்குள் இதுகுறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.

இதையும் படிங்க:இரண்டாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: முழு விவரம்

ABOUT THE AUTHOR

...view details