தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்த இரண்டு பெண் உடல்கள் மீட்பு - பழவேற்காடு ஏரி

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்த இரண்டு நாள்களில், இரண்டு பெண் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pulicat-lake
pulicat-lake

By

Published : Feb 24, 2020, 9:48 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி உள்ளது. அங்கு கலங்கரை விளக்கம், டச்சு கல்லறை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா அம்சங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அங்கு வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அந்த ஏரியில் பெண் உடல் ஒன்று மிதந்துகொண்டிருப்பதாகத் திருப்பாலைவனம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த காவல் துறையினர், அப்பெண்ணின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பழவேற்காடு ஏரி

அதைத்தொடர்ந்து, இன்று மற்றொரு 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் ஏரியில் மிதப்பதாக மீனவர்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு நாள்களில் இரண்டு பெண் உடல்கள் ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details