தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விரிவாக்கத்திற்காக 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்: வேதனையில் வியாபாரிகள் - கடைகள் அகற்றம்

தாமரைப்பாக்கத்தில் சாலை விரிவாக்கத்திற்காக 50க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டதால், பிழைப்பு நடத்த மாற்று இடத்தில் கடைகளை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடைகள் அகற்றம்
கடைகள் அகற்றம்

By

Published : Jul 10, 2021, 7:18 AM IST

திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலையோரங்களில் காய்கறி, பழம், இளநீர் உள்ளிட்டவைகளை வியாபாரம் செய்துவந்தனர்.

இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் போக்குவரத்து வசதிக்காக தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கடைகளை இடித்து அகற்றம்:

இதனையடுத்து வருவாய்துறை, காவலர்கள் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து அகற்றினர்.

இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக சாலையோரத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தங்களுக்கு பிழைப்பு நடத்த மாற்று இடத்தில் கடைகள் அமைத்து தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சேலம் இணைப்புச் சாலையை விரிவாக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details