திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேற்றப்பட்ட மழை நீருடன், ரசாயன நச்சுக் கழிவுகள் கலந்து குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்ததால் கடந்த நான்கு நாட்களாக உணவு கூட சமைத்து உண்ண முடியாமல் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டுவந்தனர்.
மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரணம்!
திருவள்ளூர்: மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான தேமுதிக சார்பில் உணவு, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள்
இதைத்தொடர்ந்து, தேமுதிக ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் இன்று காக்களூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தண்ணீர் குளம் ஊராட்சி புட்லூர், ராமாபுரம் பகுதி மக்களுக்கு நேரில் சென்று மதிய உணவு வழங்கினார்.
மேலும், மழைநீர் குடியிருப்பில் புகுந்து உடுத்த கூட மாற்றுடையின்றி தவித்த குடியிருப்பு வாசிகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் தேமுதிக நிர்வாகி வழங்கினார்.