தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிடக்கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் சென்னை வடக்கு மாவட்டம் 26ஆவது வார்டில், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்; மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம், மாதவரம் மண்டல அலுவலர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.