தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் தவித்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள் - கரோனா செய்திகள் தமிழ்நாட்டில் கரோனா

திருவள்ளூர்: ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி தவித்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

thiruvallur
thiruvallur

By

Published : Apr 15, 2020, 11:57 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் சர்க்கஸ் நடத்துவதற்காக இந்தியன் சர்க்கஸ் கலைஞர்கள் பிப்ரவரி மாத இறுதியில் வந்தனர். அதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாதால், அவர்கள் சர்க்கஸ் நடத்த முடியாமலும், வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாமலும் தவித்துவந்தனர்.

சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண உதவிகள்

இந்த நிலையில் வருமானமின்றி தவித்துவந்த அவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் இரா. தாஸ் வழங்கினார். அதையடுத்து சர்க்கஸிற்காக பயன்படுத்தப்படும் ஒட்டகம், நாய், குதிரைகளுக்கு உணவளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள நரிக்குறவர், பழங்குடியினர், துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details