திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மபள்ளி அணையில் இருந்து 170 கனஅடி தண்ணீர் குசா ஆற்றில் வெளியேற்றப்படுவதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, தமிழ்நாடு எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு வட்டம் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலப்பகுதியில் தண்ணீர் செல்லும் என்பதால் ஆற்றைக்கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.