தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுள் தண்டனை கைதியை கொடுமைப்படுத்துவதாக புகார் - சிறைக்கைதி அடித்து துன்புறுத்தல்

திருவள்ளூர்: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியை கொடுமைப்படுத்துவதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புழல் சிறை
புழல் சிறை

By

Published : Jul 2, 2020, 1:41 PM IST

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புழல் சிறையில் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் 2017ஆம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் கொடுமைப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பிரகாஷின் உறவினர்கள் கூறுகையில், “புழல் சிறையில் கரோனா பாதிப்பாளர்கள் இருப்பதாக தெரிகிறது. அவர்களுடன் தன்னை அடைக்கக்கூடாது என சிறை அலுவலர்களிடம் பிரகாஷ் முறையிட்டுள்ளார்.

அதனால் அலுவலர்கள் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். எனவே உடனடியாக அவரைக் காண ஏற்பாடு செய்ய வேண்டும்” என சிறைத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சிறைப் பணியாளருக்கு கரோனா தொற்று - கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details