தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

By

Published : Oct 4, 2021, 6:09 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி (15) அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று (அக்.3) மாலை விளையாடச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.

சிறுமி சடலம் மீட்பு

இன்று (அக்.4) காலை அதே பகுதியில் உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில், அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் குறித்து திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஹரியானாவில் டெங்கு காய்ச்சலுக்கு 24 குழந்தைகள் உயிரிழப்பு?

ABOUT THE AUTHOR

...view details