திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தியணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டனர்.
பின்னர் சடலத்தை பரிசோதனை செய்ததில், அதிலிருந்த அடையாள அட்டையில் இறந்தவர் சென்னை மண்ணூர் பேட்டையைச் சேர்ந்த ரவி என்பதும், அவர் வணிகத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.