தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருத்தணி முருகன் கோயில் மீண்டும் திறப்பு - திருத்தணி முருகன் கோயில் மீண்டும் திறப்பு

திருவள்ளூர்: கரோனா பரவல் காரணாக மூடப்பட்டிருந்த திருத்தணி முருகன் கோயில், தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

murugan
murugan

By

Published : Jun 28, 2021, 4:36 PM IST

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிருந்தும் பக்தர்கள் வருகைதந்து முருகனை தரிசித்தும் தங்களது நேர்திக்கடன்களை செலுத்தியும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது கரோனா பரவலின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இந்த கோயிலில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதால், தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

அந்த வகையில், கரோனா தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கோயில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி திருத்தணி முருகன் கோயில் இன்று (ஜூன்.28) திறக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான வசதி, மாற்றுத்திறனாளிகளும் தரிசனத்துக்காக சென்றுவர செய்யப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோயில் விடுதியில் பாலியல் தொழிலா?

ABOUT THE AUTHOR

...view details