தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் - பொதுமக்கள் அவதி! - rain water issue in thiruvallur

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

rain-water-canal-problem

By

Published : Oct 23, 2019, 3:16 PM IST

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு திருமுல்லைவாயில், தென்றல் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இதற்காக சாலையோரம் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் தென்றல் நகரில் உள்ள சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சவாலாக உள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் சகதியில் நடந்து செல்கின்றனர்.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட வந்து செல்ல முடியவில்லை. இதனால் ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details