தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தை கடக்கும்போது எச்சரிக்கை தேவை- தீபா சத்யன்

சாலையை கடக்கும்போது எந்தளவு விழிப்புணர்வோடு இருக்கிறமோ அதேபோல் தண்டவாளத்தை கடக்கும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இருப்புப்பாதை எஸ்.பி. தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.

railway-sp-conducted-awarness-program-in-veppampattu-railway-station
தண்டவாளத்தை கடக்கும்போது எச்சரிக்கை தேவை- தீபா சத்யன்

By

Published : Jul 12, 2021, 8:50 AM IST

திருவள்ளூர்:வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. வேப்பம்பட்டு பகுதிவாழ் மக்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர், ஊராட்சி மன்ற தலைவர், தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை எஸ்.பி. தீபா சத்யன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி முடிக்காமல் இருப்பதால், தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இதனால், வயதானவர்கள் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயம் அடைகிறார்கள் எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய எஸ்.பி. தீபா சத்யன், “சாலையை கடக்கும் போது எந்தளவு விழிப்புணர்வோடு செயல்படுகிறோமோ, அதேபோல ரயில் தண்டவாளத்தை கடக்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க வேண்டாம்” என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:பாம்பன் பாலத்தில் தொடர் பராமரிப்புப்பணி - செப்.19 வரை ரயில்கள் இயக்கத்தடை

ABOUT THE AUTHOR

...view details