திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அடுத்த அமைந்துள்ளது ராகவநாயுடுகுப்பம். இப்பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம், புண்ணியகோடி ஆகியோரின் குடும்பத்தினரிடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம் மகன் அப்பு(எ) ஓம்குமார் தனது கூட்டாளிகள் ஐந்துபேருடன் புண்ணியகோடி வீட்டில் புகுந்து புண்ணியகோடி உட்பட அவரது குடும்பத்தினர் நான்கு பேரை கத்தியால் குத்தியதில் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் ஆர்.கே. பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்தர் குமார் வழக்குபதிவு செய்தார். இருப்பினும், குற்றவாளிகள் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததால், ராகவநாயுடு குப்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்.கே. பேட்டை காவல் நிலையம் அருகில் சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.