திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் உள்நோயாளிகள், மகப்பேறு- குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் செயல்பாடு குறித்து அவர் கேட்டறிந்தார். அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்படவுள்ள புதிய கட்டட வடிவமைப்பு குறித்தும், கட்டி முடிக்கப்படும் கால அவகாசம் குறித்தும் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”தமிழ்நாட்டில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நாள்தோறும் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் கீழ் பதிவாகிவருகிறது. பொதுமக்கள் பண்டிகை காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”என்றார்.