தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் கிராமசபை கூட்டம்!

திருவள்ளூர்: பழவேற்காடு மார்க்கெட் பகுதியில் மது பிரியர்களால் ஏற்படும் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட செய்திகள்
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

By

Published : Jul 27, 2020, 5:40 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்க ஊராட்சி சார்பில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பழவேற்காடு பகுதியில் தொற்று ஏற்படக் காரணமாக இருக்கும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது கட்டாயமாகும், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் மார்க்கெட் பகுதியில் கடைகள் இயங்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும் பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா, பான் குட்கா போன்ற போதை வஸ்துக்கள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் பழவேற்காடு மதுபான கடைக்கு வரும் மது பிரியர்கள், குடித்துவிட்டு இந்தியன் வங்கி மற்றும் அருகிலுள்ள கம்பெனிகளுக்கு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் அத்துமீறி நடப்பதாகவும், பாட்டில்களை உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் செய்வதாகவும் புகார் அளித்தனர்.

அதன்படி பழவேற்காடு மதுபான கடை குறித்து உரிய அலுவலர்களிடம் புகார் அளிக்கத் தீர்மானம் இயற்றப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் மாலதி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் தேவராணி தேசப்பணி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details