தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்மிடிப்பூண்டியில் நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித் துறையினர் தீவிரம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் தீவிரம்
நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் தீவிரம்

By

Published : Nov 24, 2020, 1:41 PM IST

நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று (நவ.24) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாகக் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை நிவர் புயல் தாக்கும் சாத்தியக்கூறு அதிக அளவில் உள்ளது. இதனால் அங்கு பொதுப்பணித் துறையினர் முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே கடலோரப் பகுதிகளையும், சுனாமி குடியிருப்புகளையும், தனியார் திருமண மண்டபங்களையும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்.

இந்நிலையில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஜெயக்குமாரி தலைமையில் உதவி செயற்பொறியாளர் முருகன், இளநிலைப் பொறியாளர் பிரித்வி, உதவி பொறியாளர் சிவகுமார் ஆகியோர் நிவர் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் கவரப்பேட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் 10 ஆயிரம் மணல் மூட்டைகளையும், ஊத்துக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் 5 ஆயிரம் மணல் மூட்டைகளையும் தயார்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை

ABOUT THE AUTHOR

...view details