எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி! - எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி
திருவள்ளூர்: எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரை அடக்கம் செய்த இடத்தை காண ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் வந்திருந்தனர். எனினும் அவரது சமாதியை காண அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் நினைவு இடத்தை காண அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்தில், பொதுமக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.