திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பெய்த மழை காரணமாக மூன்று அடிக்குமேல் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லமுடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி! - புரெவி புயல் அப்டேட்
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக இப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மிகவும் அருகாமையில் இருப்பதால், மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. தாழ்வானப் பகுதியில் அமைந்திருக்கும் வயர்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனே வந்து அப்புறப்படுத்தவும்; மழைநீர் தேங்காமல் கால்வாயில் போக வழி செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.