திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தில், தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ், சேரி பகுதி மக்கள் பயன்படுத்தும் சுடுகாடு பாதையையும், மழைநீர் செல்லும் கால்வாயையும் ஆக்கிரமிப்பு செய்து தனியார் நிறுவனத்தினர் வேலி அமைத்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் சுடுகாடு பாதை பயன்படுத்த முடியாமலும், மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமலும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
சுடுகாடுப்பாதையை ஆக்கிரமித்த தனியார் நிறுவனம் - பொதுமக்கள் போராட்டம்! - பொதுமக்கள்
திருவள்ளூர் : கடம்பத்தூர் அருகே தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது. மழைநீர் கால்வாய் மற்றும் சுடுகாடு பாதையை ஆக்கிரமித்துள்ள இந்த நிறுவனத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மப்பேடு, கீழ் சேரிப் பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் அந்த தனியார் நிறுவனத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த மப்பேடு காவல் துறையினரும், அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளும் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : தனியார் நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்