திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மணவளநகர் ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் பெரியகுப்பம் வரதராஜன் நகர்ப் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் செல்லும் பாதையில் ரயில்வே துறை சார்பாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருவதால், இவர்களின் போக்குவரத்து பாதிப்படைவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
Protest: கொட்டும் மழையில் சாலை மறியல் இதனால், இப்பகுதி மக்கள் தடுப்புச்சுவரை அகற்றக்கோரி திருவள்ளூர் மேம்பாலம் மீது கொட்டும் மழையிலும் குடையுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவள்ளூரில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்