தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் வழங்கிய சீர்வரிசை

திருவள்ளூர்: நகராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிராம பொதுமக்கள் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினைார்.

school

By

Published : Apr 3, 2019, 8:29 AM IST

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட என்ஜிஓ காலனி நகராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 150 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் சீர்வரிசை வழங்கும் விழா மற்றும் பள்ளி பரிமாற்றம் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் கிராம பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து பள்ளிக்கு தேவையான மின்விசிறி ,நாற்காலி, தண்ணீர் ,இருக்கைகள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள் விளையாட்டுப் பொருள்கள் என பள்ளிக்குத் தேவையான மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

முன்னதாக இந்த பொருட்களுடன் பொதுமக்களும் ஆசிரியர்களும் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று பள்ளி வளாகம் வந்தடைந்தனர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சண்முக பிரியா தலைமை வகித்தார் .இதில் பள்ளி ஆசிரியர்கள் கிராம மக்கள் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Cirvarucai

ABOUT THE AUTHOR

...view details