திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுலாபுரம் ஊராட்சியில் தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இங்கு மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் சாம்பல் கழிவுகள் உரிய பாதுகாப்பு இன்றி வெளியேற்றப்படுவதால் காற்று மூலம் பரவும் நிலக்கரி சாம்பல் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், விளைநிலங்கள் மீது படர்வதால் வேளாண்மை பாதிப்புக்குள்ளாகிவிட்டது.
இதனால் அப்பகுதி உழவர்கள் தங்களின் கால்நடைகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் நிலக்கரி சாம்பல் கழிவுகளைச் சுவாசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், உடல் அரிப்பு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.