தமிழ்நாட்டில் காவல் நிலையங்களில் நடைபெறும் படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
காவல் நிலைய படுகொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - latest thiruvallur news
திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வரும் சித்ரவதை படுகொலையைக் கண்டித்து குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தான்குளம் படுகொலை சென்னை போலி மோதல் மூலம் அயனாவரம் சங்கர் படுகொலை, மதுரை காவல் நிலையத்தில் ரமேஷ் படுகொலை, திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் படுகொலை உள்ளிட்ட படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அகமது பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகி தமிழினியன், சமாஜ் கட்சி சார்பில் பிரேம்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நாகராஜ், தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.