திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதிகளின் நடுவே ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு, சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பிகள் என பல்வேறு உதிரிபாகங்கள் எடுத்து வரப்பட்டன.
இதையறிந்த நந்தியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் திடீரென அப்பகுதிக்குச் சென்று அங்கு பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேசுகையில், 'இந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைத்தால் அந்த செல்போன் டவர் மூலம் பல்வேறு நோய்ப் பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், இந்தப் பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது' என்றனர்.
செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் செல்போன் டவர் அமைக்கப்படாது என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் செல்போன் டவரில் படுத்து உறங்கிய வாலிபர்!