திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணியரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி தில்லைவிசாலம் கோவிலடி பகுதியைச் சேர்ந்த தாஸ் (38) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தாஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு! - undefined
திருச்சி: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பரோலில் வெளியே வந்த கைதி தலைமறைவானதால், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
![பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3786545-539-3786545-1562647019058.jpg)
திருச்சி
இந்நிலையில் தாஸுக்கு 3 நாட்கள் அவசரகால விடுப்பாக பரோல் வழங்கப்பட்டது. கடந்த 6ஆம் தேதியன்று பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பியிருக்க வேண்டிய நிலையில், அவர் சிறைக்கு திரும்பவில்லை. இதனையடுத்து கைதி தாஸ் தலைமறைவாகிவிட்டது உறுதியானது. இது குறித்து திருச்சி மத்திய சிறை அலுவலர் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாஸை தேடி வருகின்றனர்.
TAGGED:
trichy prisoner escape