தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு - தனியார் மருத்துவமனை முற்றுகை

பொன்னேரியில் உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு
உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு

By

Published : Oct 5, 2021, 3:32 PM IST

திருவள்ளூர்: பொன்னேரி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு லக்ஷிதா (7) என்ற மகள் உள்ளார். கடந்த 27ஆம் தேதி சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அடுத்தடுத்த நாள்களில் சிறுமிக்கு பாதிப்புகள் அதிகமானதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (அக்.4) பிற்பகல் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

உரிய சிகிச்சை அளிக்காததால் சிறுமி உயிரிழப்பு

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் ஏற்கனவே உரிய சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவேசமடைந்த சிலர் அங்கிருந்த கண்ணாடிகளை கல் வீசி உடைத்தனர். இதுகுறித்து பொன்னேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details