திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (35). இவர் சந்தேகத்தின் பேரில் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் 18ஆம் தேதி சோழவரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள மத்திய கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
புழல் சிறையில் கைதி தற்கொலை - கைதி தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கில் கைதி, சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
பின்னர் கடந்த ஜூலை 3ஆம் தேதி அங்கிருந்து சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு விசாரணைப் பிரிவில் அடைக்கப்பட்டார். பின் அவர், மன உளைச்சல் காரணமாக சிறையில் யாருமில்லாத நேரத்தில், அறையில் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட ரோந்து பணியிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு துளசிராமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.