சென்னை புழல் மத்திய சிறையில் காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த தரணி ராஜன் என்கின்ற பாண்டியன் (52) என்பவர் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நில மோசடி வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் கடந்த 22 ஆம் தேதி சிறைக்கு கொண்டு வரப்பட்ட விசாரணை கைதி.
அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வந்தபோது படிக்கட்டில் கால் இடறி விழுந்ததில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவசர ஊர்தி மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.