தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனல் மின் நிலையத்தில் தீ விபத்து! - tiruvallur news

திருவள்ளூர்: அனல் மின் நிலையத்தில், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அனல் மின் நிலையத்தில்  தீ விபத்து
அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

By

Published : Mar 8, 2020, 7:36 AM IST

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளிப் பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் இதர ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நிலக்கிரியைத் தாங்கி சென்ற 'கன்வேயர் பெல்ட்' பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து உடனடியாக, பொன்னேரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து, மூன்று வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். தகுந்த நேரத்தில் தீயை அணைத்ததால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் வீரர்கள்.

இதையும் படிங்க: 24/7 இலவச வைஃபை வழங்கும் மாநகராட்சி பூங்கா: குஷியான பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details